குற்றியலிகரம் ZMRr ceKp Q Dqf hHe Zz EeG G Ffchh F e Vv XCcr kf
நிலைமொழியின் ஈற்றெழுத்து குற்றியலுகரமாகவும் வருமொழியின் முதலெழுத்து யகரமாகவும் இருந்தால், அவையிரண்டும் புணரும்போது நிலைமொழி ஈற்றிலுள்ள குற்றியலுகரம் இகரமாகத் திரியும். அவ்வாறு திரிந்த இகரம் அரை மாத்திரையளவே ஒலிக்கும். அவ்வாறு குறைந்தொலிக்கும் இகரம் குற்றியலிகரம் ஆகும்.[1][2][3]
எடுத்துக்காட்டு
- நாடு + யாது -> நாடியாது
- கொக்கு + யாது -> கொக்கியாது
மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில், நிலைமொழியின் ஈற்றெழுத்து குற்றியலுகரம். வருமொழியின் முதலெழுத்து யகரம். இவையிரண்டும் புணரும்போது குற்றியலுகரம் இகரமாகத் திரிந்து, அரை மாத்திரையளவாக ஒலிப்பதை காணலாம்
- கேள் + மியா -> கேண்மியா
- கண்டேன் + யான் -> கண்டேனியான் [4]
இவற்றையும் பார்க்கவும்[தொகு]
- தமிழ் இலக்கணம்
- குற்றியலுகரம்
அடிக்குறிப்பு[தொகு]
- ↑ தொல்காப்பியம் நூன்மரபு 2
- ↑
யகரம் வரு வழி இகரம் குறுகும்
உகரக் கிளவி துவரத் தோன்றாது. - தொல்காப்பியம் குற்றியலுகரப் புணரியல் 5 - ↑
யகரம் வர குறள் உ திரி இகரம் உம்
அசைச்சொல் மியாவின் இகரம் உம் குறிய - நன்னூல் - ↑ வண்டலவர் கண்டே னியான் (கலித்தொகை 92-54)